×

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, பிப். 9: ஈரோடு, சூரம்பட்டி நால் ரோட்டில் ஒன்றிய பாஜ அரசின் அராஜக போக்கை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில உரிமைகள் மீது தொடர் தாக்குதல் நடத்துவது, எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சட்ட மன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்களை வைத்து ஒப்புதல் கொடுக்காமல் அடாவடியில் ஈடுபடுவது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, அரசியல் சாசனத்தை துளியும் மதிக்காமல் அராஜக போக்கில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவரும் பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷகங்கள் எழுப்பப்பட்டன.

இதில், காங்கிரஸ் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் திருச்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் தெற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன், ஆம் ஆத்மி பொறுப்பாளர் ஞான மூர்த்தி, தி.க. அமைப்புச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில், ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ நிறைவுரையாற்றினார்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Erode ,Marxist Communist Party ,Surambatti 4th Road, Erode ,District Secretary ,Raghuraman ,Dinakaran ,
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...