×

கரூர்- பழைய திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல்

 

கரூர், பிப். 9: கருர்-பழைய திண்டுக்கல் சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார், மாநகராட்சி அலுவலகம், மார்க்கெட், மாரியம்மன் கோயில், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய திண்டுக்கல் சாலை வழியாக சென்று வருகின்றன.

இதேபோல், இந்த பகுதிகளில் இருந்து லைட்ஹவுஸ் கார்னர், திருச்சி சாலை, சுக்காலியூர் பிரதான சந்திப்பு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். பழைய திண்டுக்கல் சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும், அரசு அருங்காட்சியகம், திரையரங்கம் போன்றவையும் உள்ளன. இந்நிலையில், இந்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் இந்த சாலையில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலையே ஏற்படுகிறது.

அடிக்கடி வாகனங்கள் சிக்கிக் கொண்டு எந்த வாகனமும் வெளியேற முடிவதில்லை. இதனால் நீண்டநேரம் வாகனம் நிறுத்தம் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய திண்டுக்கல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கரூர்- பழைய திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Karur ,- Old Dindigul ,Karur-Old Dindigul road ,Karur Lighthouse Corner ,Jawahar Bazar ,Office ,Market ,Mariamman Temple ,- Old Dindigul Road ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...