×

தஞ்சாவூரில் வரும் 16ம்தேதி காவிரி ஆணைய தலைவர் கொடும்பாவி எரிப்பு போராட்டம்

 

தஞ்சாவூர், பிப்.9: காவிரி ஆணைய தலைவர் ஹல்தர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் வரும் 16ம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது என்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்தார். தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி ஆணையத்தின் தலைவராக உள்ள ஹல்தர் பணி ஓய்வுக்கு முன் மத்திய அரசின் நீராற்றல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.

தற்போது இவர் கர்நாடகா அரசிடம் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை கேட்டு பெற்று அதை ஏற்றுக்கொண்டு காவிரி ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். ஓய்வுக்கு பின் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பதவியை ஹல்தருக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் காவிரி ஆணையத்தில் மேகதாது அணை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது. வெளிப்படையாக இத்திட்டத்தை எதிர்த்து ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் ஹல்தர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தஞ்சாவூரில் வரும் 16ம்தேதி காவிரி ஆணைய தலைவர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Cauvery Commission ,Kodumbavi ,Thanjavur ,Haldar Kodumbavi ,Maniarasan ,Cauvery Rights Recovery Committee ,Cauvery ,Dinakaran ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...