×

திருக்காட்டுப்பள்ளி அருகே இரு கோஷ்டியினர் மோதல்

 

திருக்காட்டுப்பள்ளி, பிப்.9: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் சரகம் ரெங்கநாதபுரத்தில் இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். ரெங்கநாதபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சையா மகன் கலையரசன் (27). இவர் ரெங்கநாதபுரம் பிள்ளை வாய்க்கால் மதலைமுத்து வயல் அருகே நேற்று முன்தினம் மாலை நண்பர் இளையராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது மற்றொரு பிரிவை சேர்ந்த ரெங்கநாதபுரம் மணிகண்டன் என்பவர் டூவீலரில் தடுமாறி வந்ததைபார்த்து, “பார்த்து போங்கள்’’ என்று சொன்னாராம்.

இதில் ஆத்திரமடைந்த ரெங்கநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த பாலு மகன் அஜய்குமார் (20), இளங்காடு தெற்கு தெரு மணிகண்டன் மகன் மணிமாறன் (23), நடுத்தெரு பாலு மகன் கார்த்திக் (38), ரெகங்கநாதபுரம் மேலத்தெரு முத்து மகன் விஷ்வா (19) ஆகிய 4 பேரும் கலையரசன் மற்றும் இளையராஜாவை ஜாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து கலையரசன் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் கலையரசன், சரத்குமார், இளையராஜா, கவியரசன் ஆகியோர் தங்களை தாக்கியதாக அஜய்குமார் ஒரு புகார் அளித்தார். இரு புகார்களையும் ஏற்று 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிமாறன், கார்த்திக், சரத்குமார், இளையராஜா, கவியரசன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post திருக்காட்டுப்பள்ளி அருகே இரு கோஷ்டியினர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Thirukkatupally ,Thirukkatupalli ,Thanjavur district ,Police Station ,Thirukkatupalli police station ,Pichaiya Makan Kalaiyarasan ,Renganathapuram Colony Street ,Madalaimuthu ,Renganathapuram Pillai ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு