×

கும்பகோணம் அருகே சனீஸ்வரன் கோயிலில் உண்டியல் உடைப்பு

 

கும்பகோணம், பிப்.9: கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் பகுதி திருநறையூரில் புகழ்பெற்ற மங்கள சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அமைந்துள்ள, ராமநாத சுவாமி கோயிலில், நேற்று காலை நடை திறக்க வந்த கோயில் ஊழியர்கள் கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கோயில் செயல் அலுவலர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த நாச்சியார்கோவில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டு ரூ.73 ஆயிரம் எடுக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உண்டியலில் சேர்ந்த பணம் தப்பியது. இந்த உண்டியலில் பணம் இல்லாத ஆத்திரத்தில் திருடர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சென்றனர். தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கும்பகோணம் அருகே சனீஸ்வரன் கோயிலில் உண்டியல் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Saneeswaran temple ,Kumbakonam ,Ramanatha Swamy Temple ,Mangala Saneeswara temple ,Tirunaraiyur ,Nachiyar temple ,Banknote ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...