×

பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

 

முத்துப்பேட்டை, பிப். 9: பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முத்துப்பேட்டை அடுத்த கோயிலூர் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலமாகும். இந்நிலையில் கோயிலூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேகமும் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து மூலவர் மந்திரபுரீஸ்வரருக்கு தீபாராதனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Lord Nandi ,Koilur Mantrapureeswarar Temple ,Pradosha ,Muthupet ,Koilur Mantrapuriswarar Temple ,Muthuppet ,Koilur ,Sametha ,Sri Mantrapureeswarar Temple ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு