×

பைத்தம்பாறை அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

 

தா.பேட்டை, பிப்.9: தா.பேட்டை ஒன்றியம் பைத்தம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஐந்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமிபூஜை விழாவை எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார். தா.பேட்டை ஒன்றியம் பைத்தம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஐந்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

ஒன்றிய செயலாளர் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், ஒன்றியக்குழு தலைவர் சர்மிளா பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு திட்டத்தின் கீழ் (2023- 24) ஐந்து வகுப்பறைகள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட ரூபாய் 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு, தர்மராஜ்,பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பைத்தம்பாறை அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Baithamparai Government School ,Thapettai ,MLA ,Kaduvetti Thiagarajan ,Thapettai Union ,Paithamparai Government Higher Secondary School ,Tha Petty Union ,Baithamparai Government High School ,
× RELATED அண்ணங்காரபேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு டெஸ்க், பெஞ்சுகள்