×

குளத்தூரில் புதிய கலையரங்கத்திற்கு அடிக்கல்

குளத்தூர், பிப். 9: விளாத்திகுளம் யூனியனுக்குட்பட்ட குளத்தூர் ஊராட்சி, குளத்தூர் முத்துமாலையம்மன் கோயில் தெருவில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் சேர்மன் முனியசக்திராமசந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் 14வது வார்டு ராஜேந்திரன், 15வது வார்டு குருநாதன், ஊராட்சி தலைவர் மாலதிசெல்வப்பாண்டி, துணை தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், வார்டு உறுப்பினர்கள் கெங்குராஜன், முத்துச்செல்வி, ஜீவிதா சதீஸ்குமார், கிளை நிர்வாகிகள் சந்துரு, லட்சுமணன், தேவேந்திரகுல சமுதாய தலைவர் முருகேசன், பெருமாள், முத்துராஜ், ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post குளத்தூரில் புதிய கலையரங்கத்திற்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Kulathur ,Kulatur ,Muthumalaiyamman Koil Street, Kulathur Panchayat ,Vlathikulam Union ,Union Chairman ,Muniyashakti Ramachandran ,
× RELATED வேம்பாரில் உதயசூரியன் சின்னத்திற்கு...