×

களக்காடு அருகே சோலார் பேட்டரி இன்வெர்ட்டர் திருட்டு

களக்காடு,பிப்.9: பாளையங்கோட்டை என்.ஜி.ஒ பி.காலனி ஜவகர் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் ராஜ்குமார் (48). இவர் களக்காடு அருகே மாவடியில் உள்ள நாங்குநேரி வானமாமலை மடத்திற்கு பாத்தியப்பட்ட நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சோலார் பேட்டரி, இன்வெர்ட்டர் பேனர்களை திருடி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.7 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ராஜ்குமார் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தோட்டத்தில் இன்வெர்ட்டர் பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே சோலார் பேட்டரி இன்வெர்ட்டர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Palaiangkottai N. G. YP ,Shanmuksundaram ,Rajkumar ,Colony Jawagar ,Nanguneri Vaanamamalai Monastery ,Mawadi ,Dinakaran ,
× RELATED களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் 1000...