×

பண்பொழி அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்

செங்கோட்டை, பிப்.9: செங்கோட்டை அருகே பண்பொழியில் செயல்படும் இ.ம.அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடந்த விழாவிற்கு தலைமை வகித்த பண்பொழி பேரூராட்சி தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான ராஜராஜன், மாணவ- மாணவிகள் 200 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண் குழு தலைவி பர்வீன் பானு, பெற்றோர்- ஆசிரியர் கழகப் பிரதிநிதி கருப்பையா, சமூக ஆர்வலர்கள் மருதையா, செய்யது அலி, சாகுல் ஹமீது, மக்கள் பிரதிநிதி பாதுஷா மசூது, ஆசிரியர்கள்- அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post பண்பொழி அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Panbozhi Govt ,Sengottai ,EC Government Higher Secondary School ,Panpozhi ,Rajarajan ,president ,Panbozhi Municipality ,DMK ,Municipal ,Headmaster ,Chellappandian ,Panbozhi Government School ,Dinakaran ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...