×

விஜயநாராயணம் அருகே ஏகாந்தலிங்க சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

நாங்குநேரி,பிப்.9: விஜயநாராயணம் அருகே ஏகாந்தலிங்க சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அக்கோயிலின் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். விஜயநாராயணம் அருகே காடன்குளம் திருமலாபுரம் கிராமத்தில் ஸ்ரீவைகுண்டம் காந்தி ஈஸ்வரர் ஏகாந்தலிங்க கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமாக சுமார் 1010 ஏக்கர் நிலங்கள் உள்ளது. காடன்குளம் திருமாபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கோயில் நிலத்தில் எந்தவொரு முன்அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளது. மேலும் கோயில் நிலத்தில் குப்பைகளை கொட்டி பாழ்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி அளித்துள்ள புகாரின் பேரில் விஜயநாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஜயநாராயணம் அருகே ஏகாந்தலிங்க சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.

Tags : Ekanthalinga Swamy Temple ,Vijayanarayan ,Nanguneri ,Ekanthalinga ,Swamy temple ,Vijayanarayanam ,Srivaikundam Gandhi Eswarar ,Ekanthalinga Temple ,Kadankulam Thirumalapuram village ,Swami ,Temple ,
× RELATED வள்ளியூர் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருட்டு