×

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு பணி மாற்றம், பதவி உயர்வு: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையில் சென்னை மற்றும் விழுப்புரம் வட்டத்தில் பணிபுரியும் 14 சாலைப் பணியாளர்கள் அலுவலக உதவியாளராக பணிமாற்றம் செய்யப்பட்டனர். நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு பணியமர்த்த 14 அலுவலக உதவியாளர்களுக்கு பணி மாற்றம் ஆணைகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

மேலும், நீண்ட நாள் கோரிக்கையான ஊட்டுப்பதவியிலிருந்து இளநிலை பொறியாளர் பதவி தற்போது, தகுதி வாய்ந்த வரைவு அலுவலர், இளநிலை வரைத்தொழில் அலுவலர், திறன்மிகு உதவியாளர் நிலை-1 ஆகிய 34 பேருக்கு பதவி உயர்வு ஆணைகளையும் மற்றும் ஊட்டுப் பதவியிலிருந்து இளநிலை வரைத்தொழில் அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த உதவி வரைவாளர் மற்றும் திறன்மிகு உதவியாளர் நிலை-1 ஆகிய 90 பேருக்கு பதவி உயர்வு ஆணைகளையும் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் கட்டுமானம், பராமரிப்பு சந்திரசேகர் மற்றும் இணை இயக்குநர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு பணி மாற்றம், பதவி உயர்வு: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Velu ,Chennai ,Chennai General Secretariat ,Viluppuram Circle ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்