×

புகையிலை விற்ற கடைக்கு சீல்

திண்டுக்கல், பிப். 9: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே டீக்கடை நடத்தி வருபவர் சரளப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (48). இவரது கடையில் நேற்று தாடிக்கொம்பு எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து பிரபாகரன் மீது வழக்குப்பதிந்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜோதிமணி அடங்கிய குழுவினர் பிரபாகரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.

The post புகையிலை விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Manikandan ,Charalapatti ,Dindigul Collector ,Dadikkombu SI Prabhakaran ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...