×

ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் பொறுப்பேற்பு

திண்டுக்கல், பிப். 9: திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த நாகராஜன் பதவி உயர்வு பெற்று நேற்று திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநராக பதவி ஏற்று கொண்டார். இவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,Dindigul ,Dindigul District Rural Development Department ,Thoothukudi district ,Assistant Director ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்