×

ரூ.300 கோடிக்கு முறையாக கணக்கு இல்லை சென்னை பல்கலை வங்கி கணக்குகள் முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை

சென்னை: ரூ.300 கோடிக்கு முறையாக கணக்கு இல்லாததால் சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை நேற்று முடக்கியது. நாட்டின் பழமையான பல்கலைக் கழகங்களில் சென்னை பல்கலைக்கழகமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டு வருமானம் மற்றும் செலவு கணக்குகளை வருமான வரித் துறையில் தாக்கல் செய்வது வழக்கம்.

அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது ரூ.300 கோடிக்கு அதிகமான நிதி இருப்பதும், அதற்கான கணக்குகளை முறையாக காட்டாததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ.300 கோடி பண பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பலமுறை சம்மன் அனுப்பியது.

ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியில் இருந்து பெறப்பட்ட நிதி உள்ளிட்ட ரூ.300 கோடிக்கான கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காமல் காலம் கடத்தி வந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை அதிரடியாக நேற்று சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் நிர்வாகம் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரூ.300 கோடிக்கு முறையாக கணக்கு இல்லை சென்னை பல்கலை வங்கி கணக்குகள் முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : University of Madras ,Income Tax Department ,CHENNAI ,Chennai University ,Madras University ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...