×

பாவாணர் கோட்டம் தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள் நன்றி

சென்னை: தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் சென்னையில், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 122வது பிறந்த விழா நேற்று கொண்டாடப்பட்டது. அங்குள்ள பாவாணரின் சிலைக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்தனர். இதையடுத்து அகர முதலி இயக்கக இயக்குநர் விஜயராகவன் தலைமையில் விழா நடந்தது.

அப்போது, தமிழ்ச் சொல்லாய்வுத் துறையில் அளப்பரும் தொண்டாற்றிய பாவாணரைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை வைப்பதுடன் கோட்டம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அறிவித்துள்ளதற்கும் தமிழ் அகராதியியல் துறையில் சிறந்த விளங்கும் அகராதி அறிஞர்களுக்கு அகர முதலி இயக்ககம் வழியாக பாவாணர் விருது வழங்குவதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post பாவாணர் கோட்டம் தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள் நன்றி appeared first on Dinakaran.

Tags : Bavanar Kotam ,Tamil Nadu Govt ,CHENNAI ,Linguist ,Devaneyab Bavanar ,Tamil Nadu Government ,Senthamil Etymology Akara Mudali Project Directorate ,Bhavanar ,Akara Mudali ,Tamil ,Bawanar Kotam ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...