×

செய்தித் துறையில் 7 உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 7 பேருக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன், கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விவேக் யாதவ் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், ஈரோடு மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி, கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், சிவகங்கை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜாசெல்வன், கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும்,
புதுக்கோட்டை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி, சென்னை தலைமையிட பொருட்காட்சி பிரிவு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜபிரகாஷ், தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், சென்னை தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பேச்சிமுத்து, தர்மபுரி அரசு போக்குவரத்து கழகத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல், திருவள்ளுவர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

The post செய்தித் துறையில் 7 உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ariyalur ,District ,Assistant ,Relations Officer ,Prabhakaran ,Kalakurichi ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு முகாம்