×

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கே.. அதிமுக, பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது : இந்தியா டுடே – சிவோட்டர் கணிப்பு

டெல்லி : நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என இந்தியா டுடே – சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே – சிவோட்டர் வெளியிட்டுள்ளது. அதில்,”நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும். கேரளாவில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது.கேரளாவிலும் 20 தொகுதிகளை INDIA கூட்டணியே கைப்பற்றும். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கேரளாவில் பாஜக ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கே.. அதிமுக, பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது : இந்தியா டுடே – சிவோட்டர் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dimuka Coalition ,Adimuka ,BJP ,India Today ,Sivotter ,Delhi ,Sivoter ,Dimuka alliance ,Dimuka Coalition Adimuka ,Dinakaran ,
× RELATED “வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்” :ஆர்.எஸ்.பாரதி