×

வெண்டைக்காய் மண்டி

தேவையானவை:

வெண்டைக்காய் – கால் கிலோ
வேக வைத்த கொண்டைக்கடலை – ஒரு கப்
அரிசி களைந்த நீர் – 2 கப்
புளி – எலுமிச்சையளவில் பாதி
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 3
சின்ன வெங்காயம் 15
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் -அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு பல் – 10
எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிவிடவும். அவ்வளவுதான், வெண்டைக்காய் மண்டி தயார்.

The post வெண்டைக்காய் மண்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெண்டைக்காய் பருப்பு சாதம்