×

விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிந்ததில் 2 பேர் சிக்கிக் கொண்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 2 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. எறையூரைச் சேர்ந்த அய்யனார் (26), சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (30) ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குவாரியில் பணிபுரிபவர்களுக்கு போதிய பாதுகாப்பு உங்கரணங்கள் வழங்குவதில்லை என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

The post விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kalguari ,Viluppuram ,Mayilam, Vilupuram district ,Mayilam ,Vilapuram district ,Dinakaran ,
× RELATED கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை