×

நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; இன்று அரசுக்கு எதிராக ‘கருப்பு அறிக்கை’ கொண்டு வருகிறோம். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைக்கும் போதெல்லாம், தனது தோல்விகளை மறைத்து வருகிறார். அதே சமயம் அரசின் தோல்விகள் குறித்து பேசும் போது அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. எனவே, கறுப்பு அறிக்கையை வெளியிட்டு அரசின் தோல்விகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறோம்.

நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம், ஆனால் மோடி அரசு அதைப் பற்றி பேசவே இல்லை. அவர்கள் எப்போதும் 10 ஆண்டுகளை ஒப்பிடுகிறார்கள், ஆனால் பண்டித ஜவஹர்லால் நேருவின் சாதனைகளைப் பற்றி ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏக்களை பாஜக கைப்பற்றியது. பாஜக அல்லாத மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது.

நாட்டில் பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் அதைக் குறைப்பதற்குப் பதிலாக, பிரதமர் மோடி அதை காங்கிரஸுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். மோடி அரசு விரும்பினால், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் பிரதமர் மோடி தனது நண்பர்களின் நலனுக்காக வெளியில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறார். மூன்று கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டு காலம் வேலை நிறுத்தத்தில் அமர்ந்து, அரசு அவற்றைப் பற்றிக் கவலைப்படவில்லை.

உங்களுக்கு கூடுதல் MSP கிடைக்கும் என்றும், வருமானம் இரட்டிப்பாகும் என்றும் விவசாயிகளிடம் பிரதமர் மோடி கூறியும் எதுவும் செய்யவில்லை. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை இவ்வாறு கூறினார்.

 

The post நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Tags : Malikarjuna Karke ,Delhi ,Congress Party ,Mallikarjuna Garke ,Union Government ,Modi ,Parliament ,Mallikarjuna Kargay ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு...