×

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.! 6.5 சதவீதமாக நீடிக்கிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அதே நிலையே தொடர்கிறது என்றார்.

தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, 2024ல் உலக பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும். உலகளாவிய வர்த்தக பலவீனமாக இருந்தாலும், அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் 2024இல் அது வேகமாக வளர வாய்ப்புள்ளது. தற்போது பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது, இந்தாண்டு நிலையாக இருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உயர்ந்துள்ள பொதுக் கடன்கள், சில மேம்பட்ட பொருளாதாரங்கள் உட்பட பல நாடுகளில் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து கவலை எழுந்துள்ளது. அதன்படி, இந்தாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உலகளாவிய பொதுக் கடன் 100% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைகளைக் குறைப்பது அவசியம் எனவும் ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

The post வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.! 6.5 சதவீதமாக நீடிக்கிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Delhi ,Governor ,Shakti Das ,Dinakaran ,
× RELATED வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக்...