×

ஆண்டிமடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி

 

ஆண்டிமடம், பிப்.8: ஆண்டிமடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கு வழங்கும் காலணிகள் அளவெடுக்கும் பணி குறித்த பயிற்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணிகள் சரியான அளவில் இருப்பதற்காக அளவெடுக்கும் பணிக்கு இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களை நியமித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்தார்.ஆசிரியர் பயிற்றுநர் ஆசைத்தம்பி தன்னார்வலர்களுக்கு காலணிகள் அளப்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் அகிலா வரவேற்று பயிற்சி அளித்தார். இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சரவணன் தன்னார்வலர்களுக்கு காலணிக்கு அளவிடும் முறையை விளக்கினார்.

 

The post ஆண்டிமடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Andimadam Union ,Antimadam ,Ariyalur District ,Andimadam ,
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு