×

டூவீலரை திருட முயன்ற 2 ரவுடிகள் கைது

சேலம், பிப்.8: சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் அப்சல்(எ)கச்சா(36), பைரோஸ்(47). இவர்கள் இருவர் மீதும் அம்மாப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் அடிதடி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில், இருவரும் நேற்று முன்தினம் இரவு, வாய்க்கால்பட்டறை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடுவதற்காக அதன் லாக்கரை உடைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து சத்தம் போடவே, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

The post டூவீலரை திருட முயன்ற 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Afzal(a) Kacha ,Byros ,Salem Ponnammapet ,Ammapet ,Vaikkalpattara ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை