×

சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல், பிப்.8: நாமக்கல் அருகே முத்துகாப்பட்டி காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல் அருகே முத்துகாபட்டியில் காசி விசுவநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று தை மாத பிரதோசம் நடந்தது. இதையொட்டி, சிவனுக்கு வெள்ளிகிரிடம் சூட்டப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காசிவிசுவநாதரை வழிபட்டனர். நேற்று பிரதோசத்தையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

The post சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Namakkal ,Muthukapatti Kashivisuvanathar temple ,Kasi ,Viswanath ,Temple ,Muthukapatti ,Shiva temples ,
× RELATED அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவன்...