×

பேக்கரி கண்ணாடியை உடைத்த இருவர் கைது

ஊத்தங்கரை, பிப்.8: ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் மெயின் ரோட்டில் பேக்கரி கடையை செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு 9 மணிக்கு, கடையில் புதுப்பட்டியை சேர்ந்த ராமசாமி(33) என்பவரும் சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த தீர்த்தகிரி(34) என்பவரும் பானிபூரி சாப்பிட்டு விட்டு, மேலும் பூரி கேட்டுள்ளனர். அதற்கு பானிபூரி தீர்ந்து விட்டது என கூறியதால், கடை கண்ணாடியை தீர்த்தகிரி கட்டையால் அடித்து நொறுக்கினார். இதுகுறித்து செல்வராஜ் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்றபோது, தீர்த்தகிரி அங்கிருந்து ஓடி விட்டார்.

இந்நிலையில், நேற்று தீர்த்தகிரி, ராமசாமி ஆகியோர், மீண்டும் பேக்கரிக்கு சென்று செல்வராஜை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை துணை தலைவர் தெய்வசிகாமணி தலைமையில், வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் தீர்த்தகிரி, ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேக்கரி கண்ணாடியை உடைத்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Selvaraj ,Anumantheertham Main Road ,Ramasamy ,Pudupatti ,Theerthagiri ,Chandrapuram ,Panipuri ,Dinakaran ,
× RELATED பெருகி வரும் மயில்களால் பயிர்கள்...