×

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, பிப்.8: பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். இதில் தனியார் மொபைல் கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. அனைத்து துறை சார்ந்த 150 மாணவர்கள் முகாமில் கலந்துகொண்டனர். இதில் 101 மாணவர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாக்கியமணி பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த முகாமில் தனியார் நிறுவன மேலாளர் டாம்நிக் புஷ்பராஜ், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Bennagaram Government Arts College ,Chief Minister ,Bhakyamani ,Srinivasan ,Head ,Department ,Computer ,Science ,Placement ,Officer ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...