×

சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க விழுப்புரம் கோர்ட் உத்தரவு

விழுப்புரம், பிப். 8: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு வழக்கில் அவர் தரப்பு வாதத்தின் மீது அரசு தரப்பு பதில் அளிக்க விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டு 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தினசரி ஆஜராகி தனது வாதத்தை தெரிவிக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகி அவரது தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தெரிவித்தனர். மேலும் அவகாசம் கேட்ட நிலையில், இதனை ஏற்க மறுத்த நீதிபதி போதிய அவகாசம் வழங்கியுள்ளதாகவும், 10ம் தேதி இந்த வாதத்தின் மீது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க விழுப்புரம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Villupuram Court ,DGP ,Villupuram ,
× RELATED புதுச்சேரி டிஜிபியாக ஷாலினி சிங்கை...