×

கம்பிக்குடி கண்மாயில் இருந்து பாப்பணம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 

காரியாபட்டி, பிப்.8: கம்பிக்குடி கண்மாயில் இருந்து பாப்பணம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.காரியாபட்டி அருகே பாப்பணம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.தற்போது போதிய மழை இல்லாததால் கண்மாய் வறண்டு நெற்பயிர்கள் வாடி கருகும் நிலையில் உள்ளது.நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது கம்பிக்குடி பெரிய கண்மாய்க்கு வந்து சேறுகிறது. இந்த கம்பிக்குடி கண்மாயின் உபரி நீரை பாப்பணம் கண்மாய் பாசனத்திற்கு கொண்டு வந்தால் பல நூறு ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். எனவே உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்ப்பணம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் காரியாபட்டி வட்டாட்சியர் சுப்ரமணியம் மற்றும் காரியாபட்டி குண்டாறு வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் முத்துசாமி ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

The post கம்பிக்குடி கண்மாயில் இருந்து பாப்பணம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kampikudi Kanmai ,Pappanam Kanmai ,Kariyapatti ,Pappanam ,Kanmai ,Dinakaran ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...