×

சாலை விபத்து எஸ்.ஐ படுகாயம்

 

போடி, பிப். 8: சின்னமனூர் அருகே புலிக்குத்தி மெயின்ரோட்டில் குடியிப்பவர் சுரேஷ் (55). இவர் எஸ்எஸ்ஐ.யாக தேவாரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் டூவீலரில் வீரபாண்டியிலிருந்து தேவாரம் காவல் நிலையத்திற்கு சென்று திரும்புவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு, பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது சங்கராபுரம் கோணம்பட்டி பிரிவு அருகே திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உத்தபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவரது மனைவி சுதா (46), நேற்று போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை விபத்து எஸ்.ஐ படுகாயம் appeared first on Dinakaran.

Tags : SI ,Bodi ,Suresh ,Pulikutty Main Road ,Chinnamanur ,SSI ,Devaram Police Station ,Veerapandi ,SI Padukayam ,Dinakaran ,
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...