×

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி

 

கமுதி, பிப்.8: கமுதி அருகே கண்மாய்க்கு செல்லும் கால்வாய் தண்ணீரில் மூழ்கி வாலிபர் ஒருவர் பலியானார். கமுதி அருகே பேரையூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் பாக்குவெட்டி பகுதியில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த கால்வாய் முழுவதுமாக தண்ணீர் காணப்படுகிறது. இந்நிலையில் மருதங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்(29) இந்த கால்வாயில் விழுந்து மூழ்கி இறந்து கிடந்துள்ளார். பேரையூர் போலீசார், மகேந்திரன் உடலை கைப்பற்றி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை மலைராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Kanmai ,Beraiyur Kanmai ,Baguvetti ,Dinakaran ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி