×

நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

 

சிவகங்கை,பிப்.8: சிவகங்கை அருகே குமாரபட்டியில் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் மண்ணியல் துறை பேராசிரியர் செல்வராஜ் மண் மாதிரி சேகரிப்பு, விதை நேர்த்தி, பசுந்தால் உரம் உள்ளிட்ட மண்ணியல் சம்பந்தமான கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப உதவி மேலாளர் ராஜா நெல் விதை, உயிர் உர விதை நேர்த்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இதில் குமாரபட்டி, காராம்போடை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வேளாண் சம்பந்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். வட்டார தொழில் நுட்பம் மேலாளர் தம்பிதுரை, கீதா உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

The post நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Rice ,Sivagangai ,Agriculture Technology Management Agency ,Department of Agriculture ,Kumarapatti ,Kunrakkudi Agricultural Science… ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்