×

பயிர்க்கடன் வழங்க லோன் மேளா

 

சிவகங்கை, பிப்.8: சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மண்டலம், காரைக்குடி சரகத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2023-2024ம் ஆண்டு பயிர்கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேற்று சிங்கம்புணரி எம்.சூரக்குடி ஏ.மேலையூர், எஸ்.எஸ்.கோட்டை ஏ.மேலையூர், கிருங்காக்கோட்டை, காப்பாரப்பட்டி, வையாபுரிபட்டி, ஏரியூர் டி.மாம்பட்டியில் நடந்தது. இன்று பிரான்மலை ஆலம்பட்டி, காளாப்பூர் கல்லம்பட்டி, சிங்கம்புணரி சிவப்புரிபட்டி, அரளிக்கோட்டை, வலசைப்பட்டி முசிந்தம்பட்டி, வா.புதூர் குளத்துப்பட்டி, தர்மபட்டி இடையம்பட்டி, 3ம் தேதி ஆலம்பட்டு குருந்தம்பட்டு, பூசலாக்குடி வடகீழ்குடி, 8ம் தேதி அனுமந்தக்குடி துடுப்பூர், 12ம்தேதி சாக்கோட்டை சிறுகம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

The post பயிர்க்கடன் வழங்க லோன் மேளா appeared first on Dinakaran.

Tags : Loan Mela ,Sivagangai ,Jinu ,Karaikudi district ,Sivagangai zone ,Mela ,Dinakaran ,
× RELATED அமானுஷ்ய கதை பிஹைண்ட்