×

திண்டுக்கல்லில் தொழுநோய் தடுப்பு புனர்வாழ்வு முகாம்

 

திண்டுக்கல், பிப். 8: திண்டுக்கல்லில் தொழு நோய் ஊன தடுப்பு மற்றும் புனர்வாழ்வு முகாம் நேற்று துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.திண்டுக்கல் மருத்துவ சுகாதாரத்துறை தொழுநோய் பிரிவு சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு இரு வார விழா ஜன.30ல் துவங்கி பிப்.13 தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று துணை சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற தொழுநோய் ஊன தடுப்பு மற்றும் புனர்வாழ்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமுதா தலைமை வகித்தார். துணை இயக்குனர் டாக்டர் ரூபன் ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அபி அண்ண சேவை சார்பில் செயலாளர் வாசுதேவன், பொருளாளர் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் தொழுநோய் தடுப்பு புனர்வாழ்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Leprosy Prevention ,Rehabilitation ,Camp ,Dindigul ,Disability ,Prevention ,Office ,Dindigul Medical Health Department ,Leprosy Awareness ,Leprosy Division ,Leprosy ,Prevention Rehabilitation ,Dinakaran ,
× RELATED பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி