×

தொன்மையான கோயில்களில் புனரமைப்பு பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்: அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோயில்களை புனரமைக்கும் வகையில் ரூ.304.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 197 கோயில்களின் பணிகளில் 16 கோயில்களில் பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ள நிலையில் இதர தொன்மையான கோயில்களில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் சட்டமன்ற அறிவிப்புகளின்படி புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகிய கோயில்களில் தேர் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்தாண்டு மகா சிவராத்திரி பெருவிழாவை இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகிய 2 கோயில்களையும் சேர்த்து 7 கோயில்களில் மார்ச் 8ம் தேதி ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோயில்களில் புனரமைப்பு பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்திடவும், ஆன்மிகப் பயணங்கள் மற்றும் மகா சிவராத்திரி பெருவிழாக்களுக்கு சிறந்த முறையில் ஏற்பாடு செய்யவும் அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கினார்.

The post தொன்மையான கோயில்களில் புனரமைப்பு பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்: அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Commissioner ,Hindu Religious Charities ,PK Shekharbabu ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...