×

ஞானவாபி மசூதி விவகாரம் அயோத்தி ராமரைப் போல் கிருஷ்ணரும் அடம் பிடிக்கிறார்: உபி முதல்வர் யோகி பேச்சு

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டிருப்பதில் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தான் பிறந்த இடம் இதுதான் என குழந்தை ராமரே ஆதாரத்தை வழங்கிய நிகழ்வு உலகில் முதல்முறையாக நடந்தது. இது நமக்கு விடா முயற்சியை கற்றுக் கொடுத்துள்ளது.

ராமர் தான் பிறந்த இடத்தில் கோயில் கொண்டுவிட்டார் என்பது மட்டுமல்ல, கொடுத்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டையை பார்த்த காசியில் உள்ள நந்தி பகவான் (சிவபெருமானின் வாகனம்), தானும் அடம்பிடிக்கத் தொடங்கினார். அதனால் காசியில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, வழிபாடு தொடங்கி உள்ளது. தற்போது மதுராவில் உள்ள கிருஷ்ணரும் அடம்பிடிக்கிறார்’ என்று பேசினார். ஞானவாபி மசூதி விவகாரத்தை குறிப்பிட்டு அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஞானவாபி மசூதி விவகாரம் அயோத்தி ராமரைப் போல் கிருஷ்ணரும் அடம் பிடிக்கிறார்: உபி முதல்வர் யோகி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Gnanavabi Masjid ,Ayodhya ,Krishna ,UP ,Chief Minister ,Yogi ,Lucknow ,Uttar Pradesh Legislative Assembly ,Yogi Adityanath ,Lord ,Rama ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...