×

மக்களை சந்திக்க மாட்டார்… குருக்களை சந்திப்பார்… 10 ஆண்டு பாஜ ஆட்சியில் எந்த நன்மையும் இல்லை: மோடி மீது சீமான் திடீர் தாக்கு

சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை என்பது அச்சுறுத்தவே. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். அடுத்த மாதம் தேர்தல் வரப்போகிறது. 10 ஆண்டு மோடி ஆட்சியில் ஒரு நன்மையும் இல்லை. எங்கள் தேசத்தின் சொத்துக்களை பிரித்து ஏர்போர்ட், துறைமுகம், ரோடு பராமரிப்பு, மின் உற்பத்தி பிரித்து, தனியாருக்கு கொடுத்து விற்பனை செய்து விட்டார்கள். கச்சத்தீவு இந்தியாவின் தமிழன் சொத்து. திருப்பி எடு என்றால் என்னை பிரிவினைவாதி என்கிறார்கள். ஆர்எஸ்எஸ், பாஜவினர் யாராவது சுதந்திர போராட்டத்திற்கு போராடினார்களா? ஒருவரை கூட சொல்ல முடியாது. சாவர்க்கர், வாஜ்பாய் ஆகியோர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு வந்தவர்கள். 2040ல் இந்தியாவை வல்லரசாக்க மாட்டார்கள். அதானி, அம்பானியின் வீடாக அல்லது நாடாக இருக்கும். 2040ல் இந்தியா என்ற நாடு இருக்காது. பிரதமர் இதுவரை மக்களை சந்தித்து இருக்கிறாரா?. குருக்களை சந்தித்தார். துயருற்ற மக்களை சந்தித்தது உண்டா?. இவ்வாறு சீமான் கூறினார்.

* தேர்தலை சந்திக்காதவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி
சீமான் கூறுகையில், ‘நிர்மலா சீதாராமன் எத்தனை தேர்தலை சந்தித்தார்?. தேர்தலில் தோல்வி அடைந்த எல்.முருகனுக்கு எதற்கு மந்திரி பதவி கொடுத்தீர்கள்?. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திடீரென மந்திரியாவது எப்படி? ஆளுநர் பதவியே அவசியம் கிடையாது. அது ஒரு உளவு அமைப்பு. எந்த கட்சி மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான். ஆர்.என்.ரவி. தாத்தா, பாட்டி வள்ளுவர் காலத்தில் வாழ்ந்தவர் போல பேசுகிறார். அவர் ஐஏஎஸ் படித்து எழுதினாரா? பார்த்து எழுதினாரா? என்பது தெரியவில்லை’ என்றார்.

The post மக்களை சந்திக்க மாட்டார்… குருக்களை சந்திப்பார்… 10 ஆண்டு பாஜ ஆட்சியில் எந்த நன்மையும் இல்லை: மோடி மீது சீமான் திடீர் தாக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Seeman ,Modi ,Naam Tamilar Party ,Salem Seeman ,NIA ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?