- ராமேஸ்வரம்
- தை அமாவாசை
- போக்குவரத்து துறை
- சென்னை
- நிர்வாக இயக்குனர்
- அரசு விரைவு போக்குவரத்து கழகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தை அமாவாசை
சென்னை: நாளை தை அமாவாசையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து இன்று ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூருவிலிருந்தும் பொது மக்கள் தை அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதற்கு ஏதுவாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை தை அமாவாசை வருவதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில் இன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்திற்கும், நாளை ராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேற்கூறிய இடங்களிலிருந்து www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.
The post தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு இன்று சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.