×

மூன்று வகை கிரிக்கெட்டிலும் நம்பர் 1: ஐசிசி தரவரிசையில் பும்ரா உலக சாதனை

துபாய்: டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையிலும் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் ஏற்கனவே முதலிடம் வகித்துள்ள அவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி வருவதைத் தொடர்ந்து டெஸ்ட் பவுலிங் தரவரிசையிலும் 881 புள்ளிகளுடன் நம்பர் 1 வீரராக முத்திரை பதித்துள்ளார்.

ஐசிசி தரவரிசை அறிமுகமானதில் இருந்து, மூன்று வகை கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்த ஒரே பவுலர் என்ற உலக சாதனையை வசப்படுத்தி அசத்தியுள்ளார்.மேலும், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்துள்ளது. தென் ஆப்ரிக்க வேகம் காகிசோ ரபாடா (851), இந்திய ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் (841) அடுத்த இடங்களில் உள்ளனர்.

The post மூன்று வகை கிரிக்கெட்டிலும் நம்பர் 1: ஐசிசி தரவரிசையில் பும்ரா உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Bumrah ,ICC ,Dubai ,Jasprit Bumrah ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...