×

TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12-ம் தேதி வரை அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 2024-25-ல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடைபெறுகிறது.

மேலும் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாவது; “பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, எம்.சி.ஏ., சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்-2024) விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி. & M.B.A., மற்றும் M.E./M.Tech க்கான பொதுவான பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கைகள் (CEETA-PG-2024). /M.Arch./M.Plan. 2024-2025 கல்வியாண்டிற்கான பட்டப்படிப்புகள் 12.02.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: 2024-25 கல்வியாண்டில் இறுதி செமஸ்டர் / தகுதித் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் பட்டியல் இல்லாமல் TANCET/CEETA-PG 2024 க்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அவர்கள் கவுன்சிலிங் / சேர்க்கையின் போது மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

The post TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் appeared first on Dinakaran.

Tags : ANNA UNIVERSITY ,TANCET ,CEETA ,Chennai ,Tanset ,M. E. ,M. Arch ,M. Cheetah ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...