×

உதகையில் மண் சரிந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் திருமதி.ராதா (வயது 38), திருமதி.பாக்கியம் (வயது 36), திருமதி முத்துலட்சமி (வயது 36), திருமதி. உமா (வயது 35) திருமதி.சங்கீதா (வயது 30) மற்றும் திருமதி.சகிலா (வயது 30) ஆகிய ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமதி.ஜெயந்தி (வயது 56), திருமதி.சாந்தி (வயது 45), திரு தாமஸ் (வயது 24) மற்றும் திரு.மகேஷ் (வயது 23) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். .

The post உதகையில் மண் சரிந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Utkai ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Utagai ,Nilgiri district ,Tamil Nadu government ,Utkai District, ,Utkai Town East Village ,Lovedale ,Dinakaran ,
× RELATED உதகைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்: ஆட்சியர் பேட்டி