×

உதகையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் போராட்டம்..!!

உதகை: உதகையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணியில் 30 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கட்டடத்திற்கு மேற்பகுதியில் உள்ள பழைய கழிப்பிடம் ஒன்று இடிந்து வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அதில் 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை எனவும் கட்டுமான பணிக்கு உரிய அனுமதி வழங்கப்படாத கட்டுமான பணியின் கான்ட்ராக்ட்டர் மற்றும் உரிமையாளர்கள் நேரில் வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதிமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என கூறி தொடர்ந்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post உதகையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Utkai ,Utagai ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!