×

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: தேசிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு!!

சாண்டியாகோ: சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தென் அமெரிக்க நாடான சிலியில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் ஜெபாஸ்டியன் பினேரா. இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையும், 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையும் ஆட்சியில் இருந்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்தார். அந்நாட்டின் பணக்காரர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினேரா நேற்று ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

அந்த ஹெலிகாப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர். லகோ ரங்கொ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த கோர விபத்தில் ஜெபஸ்டின் பினேரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் கேப்ரியல் போரிக் தேசிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினேரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

The post சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: தேசிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : president ,Chile ,Santiago ,Jebustin Piñera ,Sebastian Piñera ,
× RELATED டெல்லி மாநில காங். தலைவர் திடீர் ராஜினாமா