×

புத்தாநத்தம் பகுதியில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்த 38 குரங்குகள் கூண்டில் சிக்கியது

*பொதுமக்கள் நிம்மதி

துவரங்குறிச்சி : மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அரசு மருத்துவமனை, குடியிருப்புகள், வணிக வளாக பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து, உணவகங்கள், டீக்கடைகள், சிறுசிறு கடைகளில் திண்பண்டங்களை சூறையடுவது, விளைநிலங்களில் மின் மோட்டார் இணைப்புகளை துண்டிப்பது என பொதுமக்களுக்கு மிகுந்த சிரமங்களை அளித்து வந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை வனச்சரகர் மற்றும் வனவர் செல்வேந்திரன் தலைமையிலான வனத்துறையினர், குரங்குகள் பிடிக்கும் தொழிலாளர்களை கொண்டு கடந்த இரு தினங்களாக 38 குரங்குகளை கூண்டு அமைத்து பிடித்தனர். பிடிக்கப்பட்ட குரங்குகள் பொன்னணியாறு அணை காப்புக்காட்டில் விடப்பட்டது. மேலும் இதேபோன்று துவரங்குறிச்சி பகுதிகளிலும் அதிகளவில் குரங்குகள் உள்ளன. வீடுகளில் உள்ளே புகுந்து வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை சேதப்படுத்துகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புத்தாநத்தம் பகுதியில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்த 38 குரங்குகள் கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Putthanantham ,Manaparai ,
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி