×

சம்பள பணத்தை காரில் எடுத்து சென்றபோது துணிகரம் ₹75 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது

*அண்ணன், தம்பிக்கு வலை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே ஹரி வேலையன் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டையை சேர்ந்த ஹரி வே லையன் எல்இடி பல்பு ஒப்பந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருபவர் பூங்கா நகரைச் சேர்ந்த ராஜு மகன் சதீஷ்குமார்(33). இவர், தனது நிறுவனத்தின் திருவண்ணாமலையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரூ.82.67 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டார். அவருடன் உதவியாளர் கார்த்திக் சென்றார். காரை ராமன் ஓட்டி சென்றுள்ளார்.

புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி பெட்ரோல் நிரப்பி உள்ளனர். அப்போது சூப்பர்வைசர் சதீஷ்குமார், உதவியாளர் கார்த்திக் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கார் டிரைவர் ராமன், காரில் இருந்த பணத்தைத் திருடிக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் கார் நின்ற இடத்திற்கு வந்த சதீஷ்குமார், கார்த்திக் இருவரும் ராமன் இல்லாமல் இருந்ததை தெரிந்துகொண்டு பணத்தை பார்த்துள்ளனர். பணம் இல்லாமல் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இருவரும் பெட்ரொல் பங்கில் விசாரித்துள்ளனர். அவர்கள் கையில் பையைடன் சிப்காட் பகுதியை நோக்கி சென்றதாக தெரிவித்துள்ளனர். இதணையடுத்து சதீஷ்குமார் தன்னுயடைய முதலாளி பாண்டித்துரைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,
தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கார் டிரைவர் ராமனுக்கு உதவி செய்த பூங்குடியை சேர்ந்த செல்வமணி (19), மலையப்பா நகரை சேர்ந்த சண்முகம் (38) ஆகியோரை பிடித்து போலீசர் விசாரணை நடத்தினர்.

அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் புத்தாம்பூரில் ராமன் வீட்டு வைக்கோல் போரில் மறைத்து வைத்த ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கார், இரு சக்கர வாகனம், இரு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், இது தொடர்பாக டிரைவர் ராமன் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்பே திட்டமிட்ட டிரைவர்

திருவண்ணாமலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணத்தை எடுத்து செல்ல வேண்டும் என்று நிறுவனத்தின் முதலாளி இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்துள்ளார். இதணை தெரிந்துகொண்ட டிரைவர் ராமன் எப்படியோ இந்த பணத்தை திருடவேண்டும் என்று நினைத்து தனது தம்பி லெட்சுமண்னுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அவர்கள் போட்ட திட்டப்பபடி லெட்சுமணன், செல்வமணி, சண்முகம் ஆகியோர் வேனில் பணம் எடுத்து சென்ற காரை பின்தொடர்ந்துள்ளனர். பெட்ரோல் பங்கில் டீசல் போடும்போது பணத்தை எடுத்துக்கொண்டு இருட்டு பகுதியில் தயார் நிலையில் நின்ற வேனில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். புதுக்கோட்டையில் நடக்காவிட்டாலும் வேறு ஏதோ ஒரு இடத்தில் திருட்டு சம்பவத்தை அறங்கேற்றி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருவருக்கு ரூ.15 ஆயிரம், ஒருவருக்கு ரூ.50 ஆயிரம்

பணத்தை கொள்ளையடித்த ராமன் செல்வமணிக்கு ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதேபோல் மற்றொரு நபரான சண்முகத்திற்கு ரூ.50 ஆயிரம் கொடுத்துவிட்டு ராமனும் அவருடைய தம்பியும் ரூ.7 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீதி ரூ.75 லட்சத்தை வைக்கோள் போரில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

வீடு வேண்டாம் வைக்கோல்போர் போதும்

பணத்தை சண்முகம் வீட்டில் வைத்திருப்போம் என்று தெரிவித்தபோது, ராமன் வீட்டில் வைக்க வேண்டாம் வீட்டில் வைத்தால் வீட்டில் உள்ளவர்கள் எதாவது கேட்பார்கள். இதனால் காட்டிற்குள் உள்ள புதருக்குள் சாக்கில் பணத்தை கட்டி மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணை தெரியவந்துள்ளது.

The post சம்பள பணத்தை காரில் எடுத்து சென்றபோது துணிகரம் ₹75 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thambiku ,Web ,Pudukottai ,Hari Pelayan Contract Company ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...