×

அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்..!!

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நடப்பாண்டில் 31.01.2024 வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 15,05,448 விவசாயிகளுக்கு ரூ.11,600.33 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் ரூ.1,764.42 கோடி (15%) கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 31.01.2024 வரை 3,59,988 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக் கடனாக ரூ.1883.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 2,40,806 விவசாயிகளுக்கு ரூ.1,103.37 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் ரூ.780.38 கோடி (71%) கூடுதலாக கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 56,659 பயனாளிகளுக்கு சுயஉதவிக்குழுக்கடனா ரூ.3,581.45 கோடியும், 13,137 பயனாளிகளுக்கு டாப்செட்கோ கடனாக ரூ.101.26 கோடியும், 7,561 பயனாளிகளுக்கு டாம்கோகடனாக ரூ.63.89 கோடியும், 4,033 பயனாளிகளுக்கு தாட்கோ கடனாக ரூ.34.39 கோடியும், 9,641 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடனாக ரூ.46.13 கோடியும், 73,599 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடனாக ரூ.277.21 கோடி, 4,978 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு
ரூ.19.69 கோடி கடனும், 1,681 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடு வகையில், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம், 2023-ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 5,384 விற்பனையாளர்கள் 981 கட்டுநர்கள் என மொத்தம் 6,365 பணியிடங்களும், 2024-ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களில் 2,403 உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 8,768 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும், கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.121.47 கோடி அளவிற்கு மருந்துகளும், கூட்டுறவு மொத்த / பிரதம பண்டக சாலைகள் மூலம் 1019 கோடி அளவிற்கு கட்டுப்டற்ற பொருட்களும், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாயிலாக ரூ.2084.49 கோடி புரள் வணிகமும், பண்ணை பசுமை கடைகள் வாயிலாக 6236 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் ரூ.28.53 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரூ.339.27 கோடி மதிப்பிலான 3871 திட்டப்பணிகள் 2082 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிறைவேற்றப்பட்டு அவை பல்சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. 4462 பொதுச் சேவை மையங்கள் மூலம் 31,10,384 சேவைகள் வழங்கப்பட்டு ரூ.10.18 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு வங்கிச்சேவையினை வழங்கும் வகையில், கூட்டுறவு வங்கிகள் Bank on Wheels, Mobile ATM, Micro ATM, AEPS, Rupay Debit Card, Rupay Kisan Card போன்ற மின்னணு தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளன.

கூட்டுறவு வங்கிகளால் ஏற்கனவே CBS, RTGS, NEFT மற்றும் CTS போன்ற தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை 01 கோடியே 40 இலட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர்.கே.கோபால்.இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர். ந.சுப்பையன்.இ.ஆப., சிறப்புப்பணி அலுவலர் (தமிழ்நாடு கூட்டுறவு வங்கி) எம்.பி.சிவன்அருள்.இ.ஆ.ப.,(ஓய்வு) உட்பட கூடுதல் பதிவாளர்கள், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,KR.Periyagaruppan ,CHENNAI ,Anna Centenary Library ,Kotturpuram, Chennai ,KR Periyakaruppan ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்