×

மாயனூர், லாலாப்பேட்டை, கொசூரில் இயங்கும் 3 வார சந்தைகள் குத்தகைக்கு ஏலம்

* ஓராண்டு உரிமத்திற்கு 50 பேர் நேரடி போட்டி

* 2 இடங்களில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணாயபுரம் ஒன்றியம் மாயனூர் , லாலாப்பேட்டை, கொசூரில் இயங்கும் 3 வார சந்தை வரி வசூலுக்கு குத்தகை ஏலம் விடப்பட்டது. ஓராண்டு உரிமத்திற்கு 50 பேர் நேரடி போட்டி நடைபெற்றது. 2 இடங்களில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.தமிழக அரசின் உழவர் சந்தைக்கு அடுத்து மிகவும் கிராம மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது சந்தைகள் தான். ஏனென்றால் வாரந்தோறும் கூடும் சந்தைகளில் சுற்று வட்டாரத்தில் விளையக்கூடிய காய்கறிகள் சந்தைக்கு வரும். அந்த காய்கறிகளை வாரந்தோறும் வாங்கி வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர். அந்த வாரம் முழுவதும் வேலைக்கு சென்று விடுவார்கள்.

அப்போது ஒரு வாரம் முழுவதும் அந்த காய்கறிகள் சமையலுக்கு பயன்படும். அத்தகைய சிறப்பு வாய்ந்தது சந்தையாகும். மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டது சந்தை என்றே சொல்லலாம். அத்தகைய சந்தை ஆண்டுதோறும் ஏலத்திற்கு விடப்படும். அதன்படி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட மாயனூர் வார சந்தை, லாலாபேட்டை வார சந்தை, கொசூர் வார சந்தை, இரும்பூதிப்பட்டி வார சந்தைகளுக்கான 2024 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025 மார்ச் 31ம் தேதிக்கான வரி வசூல் செய்யும் குத்தகை ஏலம் யூனியன் சேர்மன் சுமித்ரா தேவி தலைமையில் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித் துறை துணை ஆடிட்டர். பூங்கொடி, பிடிஓ கிறிஸ்டி முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது.இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் அரசு நிர்ணயித்த வைப்புத் தொகையை யூனியன் அலுவலகத்தில் செலுத்தி வார சந்தை குத்தகை ஏலத்தில் கலந்து கொண்டனர்.மாயனூர் ஊராட்சியில் உள்ள மாயனூர் வார சந்தைக்கு அரசு நிர்ணயித்த ரூ.2,21,025 தொகையில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ரூ.2,21,200க்கு ஏலம் எடுத்துள்ளார். கொசூர் ஊராட்சியில் உள்ள கொசூர் வார சந்தைக்கு அரசு நிர்ணயித்த ரூ.1,78,500 தொகையில் ஐயர் என்பவர் ரூ.1,79,200க்கு ஏலம் எடுத்துள்ளார்.

சிவாயம் ஊராட்சியில் உள்ள இரும்பூதிப்பட்டி (கால்நடை) வார சந்தைக்கு அரசு நிர்ணயித்த ரூ.2,01,863 தொகையில் ஜெயவேல் என்பவர் ரூ.2,03,000 க்கு ஏலம் எடுத்துள்ளார்.
மேலும் சிந்தலவாடி ஊராட்சியில் லாலாபேட்டை வார சந்தைக்கும், சிவாயம் ஊராட்சியில் உள்ள இரும்பூதிப்பட்டி (காய்கறி சில்லறை) வார சந்தைக்கும் அரசு நிர்ணயித்த அதிகமாக உள்ளது என எவரும் முன் வராததால் இவ்விரண்டு சந்தைகளுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

The post மாயனூர், லாலாப்பேட்டை, கொசூரில் இயங்கும் 3 வார சந்தைகள் குத்தகைக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mayanur ,Lalappet ,Kosur ,Krishnarayapuram ,Krishnayapuram ,Dinakaran ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது