×

களக்காட்டில் தர்காவை சுற்றி வேலி அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

*2 பெண்கள் உள்பட 13 பேர் கைது

களக்காடு : களக்காட்டில் தர்காவை சுற்றி வேலி அமைக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட13 பேரை போலீசார் கைது செய்தனர்.களக்காடு கோவில்பத்து நாங்குநேரியான் கால்வாய் கரையில் செய்கு லெப்பை நயினார் அவுலியா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும். விழாவில் இந்துக்களும் பங்கேற்று தீபங்கள் ஏற்றி, வழிபட்டு வருகின்றனர். தர்கா முன்புள்ள கால்வாய் கரை வழியாக கோவில்பத்து பகுதி பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்க செல்லவும், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்த நீர்மாலை எடுக்க செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தர்காவை சுற்றியுள்ள, பகுதியில் தர்காவுக்கு சொந்தமான இடம் எனக்கூறி தர்கா நிர்வாகத்தினர் கம்பி வேலி போட முயற்சி செய்தனர். இதற்காக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தர்கா முன்புள்ள இடத்திலும் கற்கள் நடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோவில்பத்து பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி, பிரசன்னகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் அப்பகுதியில் வேலி அமைத்தால் தாங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். கோவில்பத்து பாலத்தில் அமர்ந்து போராட்டமும் நடத்தினர்.

அவர்களுக்கு ஆதரவாக பாஜ, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினரும் குவிந்தனர். இதேபோல் தர்கா முன்பு எஸ்டிபிஐ நிர்வாகிகள் உள்பட முஸ்லிம்களும் ஏராளமானோர் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் வேலி அமைப்பதும் நிறுத்தப்பட்டது. களக்காடு, பிப். 7: களக்காட்டில் தர்காவை சுற்றி வேலி அமைக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட13 பேரை போலீசார் கைது செய்தனர்.

களக்காடு கோவில்பத்து நாங்குநேரியான் கால்வாய் கரையில் செய்கு லெப்பை நயினார் அவுலியா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும். விழாவில் இந்துக்களும் பங்கேற்று தீபங்கள் ஏற்றி, வழிபட்டு வருகின்றனர். தர்கா முன்புள்ள கால்வாய் கரை வழியாக கோவில்பத்து பகுதி பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்க செல்லவும், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்த நீர்மாலை எடுக்க செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தர்காவை சுற்றியுள்ள, பகுதியில் தர்காவுக்கு சொந்தமான இடம் எனக்கூறி தர்கா நிர்வாகத்தினர் கம்பி வேலி போட முயற்சி செய்தனர். இதற்காக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தர்கா முன்புள்ள இடத்திலும் கற்கள் நடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோவில்பத்து பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி, பிரசன்னகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் அப்பகுதியில் வேலி அமைத்தால் தாங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். கோவில்பத்து பாலத்தில் அமர்ந்து போராட்டமும் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக பாஜ, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினரும் குவிந்தனர். இதேபோல் தர்கா முன்பு எஸ்டிபிஐ நிர்வாகிகள் உள்பட முஸ்லிம்களும் ஏராளமானோர் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் வேலி அமைப்பதும் நிறுத்தப்பட்டது.

The post களக்காட்டில் தர்காவை சுற்றி வேலி அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Kalakadu ,
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்