×

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி?: சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேமுதிக ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா கருத்து கேட்கிறார். ஆலோசனை கூட்டத்தில் 79 மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தேமுதிக-வை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக, பா.ஜ.க. தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி, விருதுநகர், சேலம் உட்பட வாக்கு வங்கி அதிகம் உள்ள 7 தொகுதிகளை தேமுதிக தேர்வு செய்துள்ளது. குறைந்தது 4 மக்களவை தொகுதிகள், 1 மாநிலங்களவை பதவி அளிக்கும் கூட்டணியில் இடம்பெற தேமுதிக திட்டமிட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி?: சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Chennai ,DMD ,General Secretary ,Premalatha ,DMUD ,DMK ,Tamil Nadu ,ADMK ,BJP ,Naam Tamil party ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...