×

ஆடுகளை வேட்டையாடும் நாய்கள் கூட்டம்

* வருமானத்தை இழக்கும் விவசாயிகள் * நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மண்டபம் : மண்டபம் ஒன்றியம் மற்றும் ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளில் ஆடுகளை நாய்கள் கடித்து பலியாக்குவதால், ஆடு வளர்ப்பு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து அச்சத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான மண்டபம் ஒன்றியம் மற்றும் ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் 20 ஆயிரம் குடும்பத்திற்கு மேலானோர் ஆடு வளர்க்கும் மற்றும் விவசாயம் தொழில் செய்து வருகின்றனர். இதில் ராமேஸ்வரம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பெரும்பாலானோர் வீடுகளில் 10 முதல் 100 ஆடுகள் சொந்த ஊர்களில் தோப்புகளில் வளரும் செடிகளை மேய விட்டு ஆடுகளை வளர்க்கின்றனர்.

வேதாளை ஊராட்சி இடையர் வலசை, சாத்தக்கோன்வலசை ஊராட்சி பகுதியில் உள்ள உடையார் வலசை மற்றும் பிறப்பான்வலசை, தாமரைக் குளம், நொச்சுயூரணி, புது மடம்,இருமேனி, ரெட்டையூரணி, மானங்குடி மற்றும் நைனாமரைக்கான் வெள்ளரி ஓடை, கும்பரம், புதுவலசை பனைக்குளம், அலையான்குளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் மாற்றுத்தொழில்கள் எதுவும் செய்யாமல் வங்கியில் கடன் நிதி பெற்று ஆயிரம் ஆடுகள், 2000 ஆடுகள் என தமிழகத்தில் விவசாய நிலங்கள் இருக்கும் அனைத்து மாவட்ட பகுதிகளிலும் பல மாதங்களாக சென்று ஆட்டு கெடை அமைத்து தங்கி ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு வளர்ப்பு விவசாயம் பெரிய அளவில் லாபத்தை கொடுப்பதால் இந்த மண்டபம் ஒன்றியம் மற்றும் ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் ஆடு வளர்ப்பதற்கு அதிகமான பொதுமக்கள் கவனம் செலுத்துகின்
றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியான மண்டபம் ஒன்றிய மற்றும் ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் விவசாயிகள் ஆடுகளை பகலில் உணவுக்கு காடுகளுக்கு அழைத்து சென்று இரவு வீடுகள் மற்றும் தோப்புகளில் அமைக்கப்பட்டுள்ள கெடைகளுக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக தங்க வைப்பார்கள். இந்த நிலையில் சில மாதங்களாக நாய்கள் கிடைகளுக்குள் சென்று ஆடுகளை பல இடங்களில் கடித்து பலியாக்கி விடுகிறது.

கடந்த 2ம் தேதி மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சி உடையார்வலசை என்ற கிராமத்தில் ஆட்டுக்குட்டி உள்பட 15 ஆடுகளை நாய்கள் கடித்ததில் பலியாகி விட்டது. இதனால் ஆடு வளர்த்த ராமு என்ற விவசாயிக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிகழ்வு மாதிரி ஆடுகளை நாய் கடித்து உயிரிழந்ததில் பல ரூபாய்களை இழந்து விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இதனால் வங்கியில் வாங்கிய கடன் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்படைந்து அடைந்து அச்சத்துடன் உள்ளனர். மண்டபம் ஒன்றியம்,ராமேஸ்வரம் பகுதிகளில் தெருநாய்கள் பொதுமக்களை கடித்து காயத்தை ஏற்படுத்துவதும், ஆடுகளை கடித்து உயிரிழப்புகளை ஏற்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதுபோல சாலைகளில் குறுக்கே சென்று இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விபத்தில் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டும் வருகின்றனர். ஆதலால் நாய்களை அழிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டு என ஆடு வளர்க்கும் விவசாயிகள், வாகனம் ஓட்டுனர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே நாய்கள் கடித்து 15 ஆடுகள் சாவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மேய்ச்சலுக்கு சென்றபோது தெருநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ராமேஸ்வரம் அருகே, தங்கச்சிமடம் பஞ்சாயத்தில் சந்தியாகப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் வழியில் ரயில் தண்டவாளத்தையொட்டி கோழி கழிவுகளை கொட்டியுள்ளனர். இவைகளை தின்பதற்காக, இப்பகுதிக்கு தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றன.

இந்நிலையில், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள தண்ணீர் ஊற்று கிராமத்தை சேர்ந்த ஹாலின் என்பவர் நேற்று முன்தினம் 15 ஆடுகளை ரயில் தண்டவாளப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுச் சென்றார். மாலையில் தானாக வீடு திரும்பும் ஆடுகள் நேற்று நீண்ட நேரமாகியும் வந்து சேரவில்லை. இதனால், நேற்று காலை ஹாலின் ஆடுகளை தேடிச்சென்று பார்த்தபோது தண்டவாளப் பகுதியில் 15 ஆடுகளும் இறந்து கிடந்தன. அவைகளின் உடல்களில் தெருநாய்கள் கடித்த தடம் இருந்தன.

கோழிக் கழிவுகளை தின்ன வந்த தெருநாய்கள் 15 ஆடுகளையும் கடித்து கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, கோழிக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆடுகளை வேட்டையாடும் நாய்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mandam Union ,Rameshwaram island ,Ramanathapuram District ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...